DOLL DECORATION

12.08.25 06:42 PM - Comment(s) - By zwebsite

Doll Decoration Workshop at Vivekananda Cultural Centre

In a world increasingly shaped by digital distractions, the Vivekananda Cultural Centre (VCC) in Chennai offers a refreshing return to tradition through its thoughtfully curated workshops. One such initiative—the Doll Decoration Workshop—celebrates the timeless art of Indian doll-making while nurturing mindfulness and cultural pride.

In the serene ambience of Vivekananda House campus, the workshop brings together the passionate participants eager to learn and the intricate craft of decorating traditional Indian dolls.


Why Doll Decoration Matters in Indian Culture

  • Cultural Continuity: Doll decoration, especially during festivals like Navaratri, plays a vital role in preserving regional traditions such as Golu displays.
  • Mindful Craftsmanship: The workshop emphasize the meditative quality of handcrafting—training both mind and hands to focus, thereby reducing stress and promoting mental clarity.

Upcoming Batch Theme

Madurai Meenakshi

    • Skill Empowerment: Participants not only learn artistic techniques but also gain confidence in expressing their creativity through culturally significant forms.

    We choose theme

    Every time a new theme will be selected to teach this mindful art form which help the enthusiasts verity of experiences to learn and become more creative than the taught.

    • What VCC is doing…

      In early cultural events there used to dolls of Only Mud-clay with Natural colours. Later it developed with plastic or rubber materials for children play. VCC is trying to preserve our cultural roots with the present generation, though not same age old method or material we are trying to preserve and promote this and similar art form by conducting workshops.

      Workshops like these are more than just artistic sessions—they are cultural interventions. By reviving and teaching traditional arts, VCC continues to fulfill its mission of transforming individuals into enlightened citizens through value assimilation.

      Whether you're an art enthusiast, a cultural advocate, or simply someone seeking a meaningful experience, the Doll Decoration Workshop is a beautiful reminder that tradition, when nurtured, becomes timeless.

Timing

8:00 am - 5:30 pm


Fees

₹ 1200/-


Date

7th Sep 2025 - Sunday


All materials will be provided and lunch will be served

விவேகானந்தா கலாச்சார மையத்தில் பொம்மை அலங்கார பண்பாட்டு பட்டறை
            இன்றைய டிஜிட்டல் உலகத்தில், சென்னை விவேகானந்தா கலாச்சார மையம் (VCC) பாரம்பரியத்தை மீண்டும் இணைக்கும் ஒரு அருமையான முயற்சியாக பல்வேறு பட்டறைகளை நடத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று — பொம்மை அலங்கார பட்டறை, இது இந்திய பாரம்பரிய பொம்மை அலங்காரக் கலைக்கு மரியாதை செலுத்துவதோடு, மன அமைதி மற்றும் கலாச்சார விழிப்புணர்வையும் வளர்க்கிறது.

            விவேகானந்தா இல்லம் வளாகத்தின் அமைதியான சூழலில், இந்த பட்டறை பாரம்பரிய இந்திய பொம்மைகளை அலங்கரிக்கும் நுணுக்கமான கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கிறது.

இந்திய கலாச்சாரத்தில் பொம்மை அலங்காரம் ஏன் முக்கியம்?

பாரம்பரியத் தொடர்ச்சி
            நவராத்திரி போன்ற திருவிழாக்களில், குறிப்பாக 'கொலு' பொம்மை அமைப்புகளில், பொம்மை அலங்காரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பிராந்திய கலாச்சாரங்களை பாதுகாக்க உதவுகிறது.

அமைதியான கைவினை
           இந்தப் பட்டறைகள் கைவினை செய்முறை மூலம் மனதையும் கைகளையும் ஒரே இடத்தில் குவிக்கச் செய்ய  பயிற்சி அளிப்பதால் மன அழுத்தத்தைக் குறைத்துத் தெளிவான சிந்தனையை ஊக்குவிக்கின்றன.

திறன் வளர்ச்சி
            பங்கேற்பாளர்கள் கலைதிறன்களை மட்டுமல்லாமல், பாரம்பரிய வடிவங்களில் தங்கள் சுய சார்பு ஆற்றலை வெளிப்படுத்த நம்பிக்கையையும் பெறுகிறார்கள்.

தலைப்பு தேர்வு செய்தல்
            ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு தேர்வு செய்யப்படுகிறது. இது இந்த மன அமைதி தரும் கலை வடிவத்தை பல்வேறு அனுபவங்களுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. கற்றதைக் காட்டிலும் அதிகமான படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

VCC என்ன செய்கிறது…
            முந்தைய காலங்களில், கலாச்சார நிகழ்வுகளில் இயற்கை நிறங்களுடன் மண் பொம்மைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற பொருட்கள் குழந்தைகளுக்காக வந்தன. VCC இன்றைய தலைமுறையுடன் பாரம்பரியத்தை இணைக்கும் முயற்சியில், பழைய முறைகளோ அல்லது பொருட்களோ இல்லாவிட்டாலும், இந்தக் கலை வடிவங்களை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் பட்டறைகள் நடத்தி வருகிறது.

            இந்த வகையான பட்டறைகள் வெறும் கலை நிகழ்வுகள் அல்ல — இவை ஒரு கலாச்சாரப் புரட்சி. பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து, கற்றுத்தருவதன் மூலம், மூலம் VCC தனிப்பட்ட மனிதர்கள் அறிவொளி மிக்க குடிமக்களாக மாற வேண்டும் என்னும் தன் நோக்கத்தை செயல் படுத்துகிறது.

            நீங்கள் ஒரு கலை ஆர்வலராக இருந்தாலும், கலாச்சார ஆதரவாளராக இருந்தாலும், அல்லது ஒரு அர்த்தமுள்ள அனுபவத்தை நாடுபவராக இருந்தாலும், பொம்மை அலங்கார பட்டறை பாரம்பரியத்தை நேர்த்தியாக வளர்க்கும் அழகான நோக்கமாக இருக்கும்.

    zwebsite

    Share -